நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவத்தளபதி கோரிய மேலதிக அதிகாரங்களை வழங்க தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு மேலக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இராணுவ தளபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பில் கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் அஜித் பீ பெரரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘முன்னரும் இதுபோன்று இரணுவத்தினருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் எந்த பகுதியிலானாலும் தேவை ஏற்படின் இராணுவத்தினருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.