நுண்கடனை செலுத்த வவுனியாவில் தயிர் விற்ற பெண்ணின் வாயில் மோர் ஊற்றி ஒளியேற்றிய இளைஞர்கள் ! நெகிழ்ச்சி சம்பவம்

0

வவுனியாவில் ஏழை பெண்ணின் கண்ணீரை துடைத்த இளைஞர்கள் கோவில்குளம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வறுமை காரணமாக பிள்ளைகளின் கல்வி செலவிற்காகவும் நுன்நிதி நிறுவனத்திடம் பெற்றுக்கொண்ட கடனை திரும்ப கொடுக்கவும் வீதியில் தயிர் விற்று தனது வாழ்க்கையை கொண்டு நடத்துகிறார்

இவரை பற்றி இணைய ஊடங்களில் கடந்த 17.08.2018 அன்று செய்தி வெளியானதை அடுத்து நல்ல மனம் படைத்த ஒருவரான சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுதர்சன் அருனகிரிநாதன் எனும் சமூக அக்கறை கொண்ட இளைஞன் குறித்த பெண்ணின் கடணை துடைப்பதற்கு 30.000பணத்தினை உதவி தொகையாக அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் குறித்த பணத்தொகையினை ப.கார்த்தீபன் என்பவரிடம் கொடுக்கப்பட்டது .கார்த்தீபன் அவர்கள் நேரில் சென்று அப்பெண்ணிடம் பணத்தினை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த பணத்தொகையினை அனுப்பி பெண்ணின் வாழ்வில் ஒளியேற்றிய சுதர்சன் அவர்களுக்கு எமது ஈழம் நியூஸ் இணைய குழுமம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் குறித்த தகவலை செய்தியாக்கிய ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இதேவேளை குறித்த பெண்ணை சந்தித்த சிறிரெலோ இளைஞரணியினர் அப்பெண் வாடகை வீட்டில் வசித்துவருவதை அறிந்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் பணிப்பின் பெயரில் நிரந்தர வீடு அமைப்பதற்கு 2பரப்பு காணி வழங்கயதுடன் அதில் தற்காலிக வீடு ஒன்றை அமைப்பதற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர் சிறிரெலோ இளைஞரணிக்கும் கட்சி செயலாளர் ப.உதயராசா அவர்கட்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஈழம் நியூஸ் தெரிவித்துக்கொள்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.