வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார், வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முயன்ற வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் வண்டியை செலுத்திய நடராஜா ஜனார்த்தனன் (27) படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் சூசைப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த பேரம்பலம் திருச்செல்வம் வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.