30 ஆண்களாக மனிதர்களை கொன்று உண்டு வந்த பெண் ! கணவரையும் விட்டுவைக்கவில்லை ! அதிர்ச்சி செய்தி

0

சர்வதேச செய்திகள்:ரஷ்யாவின் கரஸ்நோடர் பகுதியை சேர்ந்தவர் நடாலியா பஷீஷ்வா என்பவர், கடந்த 18 வருடங்களாக ஆண்களாக மனிதர்களை கொன்று உண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நடாலியா பஷீஷ்வா, 43 வயதாகும் ரஷ்யா பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த18 வருடங்களாக மனிதர்களை கொன்று, உணவாக சமைத்து உண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து, தன் கணவருக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நடாலியா பஷீஷ்வா தன் கணவரையே கொன்று உண்டுள்ளார்.

35 வயதான அவரது கணவர் டிமிட்ரி பக்சேவா ‘டெவில்’ என்றும் அழைக்கப்படுவார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நடாலியா பஷீஷ்வாவை பொலிஸார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் 7 நரமாமிச துண்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நடாலியா பஷீஷ்வா கொன்று குவித்த 30 நபர்களையும் அவர் ஆன்லைன் டேட்டிங் வலைதளத்தின் மூலம் வரவைத்து கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடாலியா பஷீஷ்வா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 15 சிறை தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.