அரசியல் கைதிகளைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வருகின்ற அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை (21) முற்பகல்- 10 மணி முதல் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ப இடம்பெறவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புக் கேட்டுள்ளது.