9 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு ஆசிய கிண்ணத்தை பெற்று கொடுத்த யாழ்ப்பாணத்து தமிழச்சிகள்

0

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இவ்வாண்டிற்கான சாம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அணியை 69 – 50 என்ற அடிப்படையில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளதுடன், இந்தத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்ற சந்தர்ப்பம் இது என்பதுடன் ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகள் இம்முறை சிங்கப்பூரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்​கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழச்சிகள் என்பதால் (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களாகிய நாம் மிகுந்த பெருமைகொள்கிறோம். தர்ஜினி அவர்களின் அபாரத் திறமை சொல்லற்கரியது. வாழ்த்துக்கள் எம் மண்ணின் மகள்களே .

எம் மண்ணிலே தர்ஜினி போல், எழிலேந்தினிபோல் ஏராளம் ஏராளம் வீரவீராங்கனைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தென்னிலங்கை கண்டுகொள்வதில்லை. இனத்துவ விகிதாசார அடிப்படையில் கூட எம்மவர்க்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. நாம் தமிழர் என்ற ஒரேயொரு காரணம்தான் இந்நிலைக்கு காரணம்.

அதனால்தான் திறமையே இல்லாத தனிச் சிங்கள வீரர்களைக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணி அண்மைய ஆட்டங்களில் படுதோல்வியைச் சந்தித்து மண் கவ்வி வருவது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.