துப்பாக்கி முனையில் 17 வயது காதலியை கடத்திய காதலன் ! சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்

0

இலங்கையின் அம்பலாந்தொட்ட – வலேவத்தை கொட்ட போக என்ற பகுதிக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த சிலர் 17 வயதான யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

யுவதியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அம்பலாந்தொட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.யுவதியை கடத்தியவர்கள் யுவதியின் காதலன் தலைமையிலான குழுவினர் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

17 வயதான எம்.பி. நிபுனி வத்ஷானி என்ற யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

6 பேர் கொண்ட குழுவினர் யுவதியின் வீட்டுக்கு சென்று தந்தை மற்றும் தாயை தாக்கி விட்டு யுவதியை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.

யுவதியை கடத்திச் சென்றவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். யுவதி உறங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை துப்பாக்கியால் சுட்டு திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விபரித்த யுவதியின் தந்தையான வசந்த முத்துமால,

“அதிகாலை 2.30 அளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. நான் அறைக்குள் இருந்து வரவேற்பறைக்கு வந்த போது வீட்டுக்குள் சிலர் இருந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கியை வைத்திருந்தனர்.

வரவேற்பறைக்கு சென்ற என் தலையில் துப்பாக்கியை வைத்து மண்டியிடுமாறு கூறினர்.

பின்னர் எனது மூத்த மகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி விட்டு எனது இளைய மகளை பலவந்தமாக கடத்திச் சென்றனர்” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.