தெமட்டகொடவில் உள்ள இலங்கைப் பெற்றோலியக்கூட்டுத்தாபன அலுவலகத்தில் இருந்து விசேட அதிரடிப்படையின் சீருடை தரித்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்க வெளியேறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நேற்று அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக அவருக்கு விசேட அதிரடிப்படையின் சீருடை தரித்து, அதிரடிப்படை வீரர்போன்று அவர் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகின்றது.
முன்நாள் அமைச்சர் அர்ஜுன ரனதுங்க கைது- மகிந்த அதிரடி
முன்னாள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தெமட்டகொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைமைகத்துக்கு சென்ற நிலையில் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் மோதலொன்று இடம்பெற்றது.
குறித்த குழுவினர் மீது, அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது மூவர் காயமடைந்தனர். அதில் இருவர் உயிரிழந்ததுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாகவே அர்ஜீன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்த போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ சட்ட ஒழுங்கு அமைச்சராக பொறுப்பேற்ற சில மணி நேரத்தில்இந்த அதிரடிக் கைது நடைபெற்றிருக்கின்றது.