அப்படியானால் நாங்கள் எவளவோ பெரிய பாவங்களை செய்துள்ளோம்!

0

தேசிய பட்டியல் மூலம்
1989 (அ. அமிர்தலிங்கத்திற்கு பிரதியீடாகவும் )
1999. (நீலன் திருச்செல்வத்திற்கு பிரதியீடாகவும் )
என இருதடவையும்

நேரடியாக வாக்களித்து
2000
2004
2010
2015
என தொடர்ச்சியாக நான்கு தடவையுமாக
மொத்தமாக 6 தடவை பாராளுமன்றம் அனுப்பியுள்ளோம்.

இந்த பாவத்தையெல்லாம் நாங்க எங்க போய் கழுவுறது. ?

யாரையும் குற்றம் சொல்லுமுன் அதற்கான தகுதி தங்களிடம் இருக்கா என பார்க்க வேண்டும் அது உங்களிடம் உண்டா?

இதுவரை உங்கள் சொந்த பணத்தில் (அதாவது அரசியலில் வந்து மக்களால் தெரிவு செய்ப்பட்டு பாராளுமன்றம் சென்று சம்பாதித்த பணத்தில் என்ன மக்களுக்கு செய்துள்ளீர்கள் ??

இதுவரை மக்களை ஏமாற்றி பிழைப்பு நடுத்தியதை தவிர நீங்க செய்த நல்ல காரியம் என்ன?

அரசியலுக்கு வருமுன் உங்கள் சொத்து மதிப்பு என்ன?
வந்த பின் இப்போது சொத்துமதிப்பு என்ன?

அல்லது யுத்தம் நடந்த காலத்தில் குடும்பத்தை இந்தியாவில் சொகுசாக வாழவைத்துவிட்டு இந்த மண்ணில் எத்தனையோ அளப்பபெரியதியாகங்களை ஆற்றிய மக்களின் வாக்கில் (இன்றளவும் அவர்கள் வாழ வழியின்றியே கழிக்கிறார்கள் ஓவ்வொருநாட்களையும்) அவர்களின் வாக்கைப்பெற்று பாராளுமன்றம் போய் அங்கும் விசேட சலுகைகளுடன் சொகுசு வாழ்கை வாழ்ந்த நீங்கள் உண்மையாலும் மக்கள் பிரதிநிதிதானா ஒரு மக்கள் தலைவன் அல்லது பிரதிதி மக்களோடு மக்களாக வாழ்வானா அல்லது அன்னிய நாட்டினுள் குடும்பத்தை அனுப்பிவைத்து சுகவாவழ்வு வாழ்வானா?

விக்கியராவது யாற்றையும் காலில் விழாது சொந்த காலில் நின்று மானத்தோடு அரசியல் செய்கிறார் .

ஆனால் நீங்கள் அப்படியா?

2004 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் தீவகம் நாராந்தனை பகுதியில் வைத்து பிரச்சாரத்திற்கு சென்ற உங்களை விரட்டி விரட்டி அடித்து கலைத்து காயப்படுத்திய ஈ பி டி பியோடு அற்ப உள்ளூராட்சி பதவிக்காக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது மாத்திரமல்ல, அந்த கூட்டணிக்காக ஸ்ரீதர் திரையரங்கில் நாக்கை தொங்கபோட்டு கொண்டு இருந்தியலே இதைவிட கேவலமான செயல் ஏதும் உண்டா ??

அற்ப உள்ளூராட்சி ஆட்சி அமைப்புக்காக நீங்களே துரோகியென விழித்த டக்ளஸுடன் கூட்டணிக்காக அமைக்க இரவோடு இரவாக ஓடிப்போன நீங்கள் எந்த மக்கள் போராட்டங்களுக்கு முன்னுக்கு நின்று ஆதரவை கொடுத்துள்ளீர்கள் ?

நெடுந்தீவு மக்களின் மீள்குடியேற்றம்?

கேப்பாப்பிலவு மக்களின் மீள்குடியேற்ற காணிமீட்பு?

வவுணியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் 2 வருடத்தை கடந்து செல்லும் போராட்டம்??

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக மாணவர்கள் நடாத்திய நடைபயண போராட்டம்.??

வடமராட்சி கிழக்கில் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்? ?

இன்னும் நீழும் தமிழர்தம் வாழ்வுக்கான போராட்டங்கள் என எதில் முன்னின்றுள்ளீர்கள்.

“இனம் சிந்திய சென்னீரும் சிந்துகிற கண்ணீரும் சும்மா விடாது”

Leave A Reply

Your email address will not be published.