அரச தொலைக்காட்சியை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த மஹிந்த ஆதரவாளர்கள்!

0

இன்று மாலை முன்னாள் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமாராக பொறுப்பேற்றுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தை மகிந்த ஆதரவாளர்கள் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

மகிந்த பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிகழ்வை ஒளிபரப்பாத காரணத்தினால் அந்நிறுவனத்தை மகிந்தவின் ஆதரவாளர்கள் முடக்கியிருந்ததாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது, தொடர்ந்து மகிந்த பதவியேற்ப்பு நிகழ்வை ஒளிபரப்புமாறு மகிந்த தரப்பு வற்புறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து மகிந்தவின் பதவியேற்பு நிகழ்வு மற்றும் மகிந்தவின் கொள்கை சார்ந்த விடயங்களை தற்போது குறித்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.