நடிகை அமலா பால் தமிழில் ‘மைனா’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய், விக்ரம், அதர்வா, ஆர்யா உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இதற்கிடையில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்தும் செய்துள்ளார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் திருமணத்துக்கு முன்பை விட தற்போது படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் தற்போது ‘ஆடை’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது.
இந்நிலையில் அமலா பால் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது.