ஆவா குழு பொதுமக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை ! வீதிகள் எங்கும் துண்டுப்பிரசுரங்கள் ! துண்டுப்பிரசுரம் உள்ளே

0

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளன.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எமது செயற்பாடு யாழ்மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் செயற்பட்டுவருவது அனைத்து மக்களும் அறிந்த விடயமாகும்.

எமது செயற்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் வவுனியாவில் வீதி ஓரங்களில் நின்று பொதுமக்களுக்கும் இளம் பெண்களுக்கும் இடையூறுகள் ஏற்படுத்தும் இளைஞர்களைத் திருத்தும் முகமாக அவர்களையும் எமது திட்டத்திற்குள் உள்வாங்கவுள்ளோம்.

ஆகவே அவர்களைக் காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் மக்களுக்கும், நல்லெண்ண நோக்கோடு பொலிசாருக்கு காட்டிக்கொடுக்கும் நோக்கில் செயற்படும் இளைஞர்களை எச்சரிக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து இன்று காலை குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளதாக தெரியவருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.