இனி பெண்களை தவறாக தொட்டால் அரோகரா தான் ! பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து விடுதலை! புதிய ஆடை கண்டுபிடிப்பு! படங்கள்

0

பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான் பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன.

பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 கிலோ வால்ட் மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும். அது தொடும் நபரை மயக்க நிலைக்கு தள்ளும். அதுமட்டுமன்றி சம்பவ இடம், நேரம் குறித்த தகவல்கள் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் ஜி.பி.எஸ். மூலம் எஸ்.எம்.எஸ். சென்றுவிடும். 82 முறை ஷாக் கொடுக்க கூடிய அளவுக்கு திறன் வாய்ந்ததாக இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அதி சக்திவாய்ந்த மின்சார தாக்குதல் கொடுக்கப்படும் பொழுது, அதை அணித்து இருக்கும் பெண்களுக்கு அது எந்த கேடும் விளைவிக்காத அளவுக்கு இந்த பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHE- Society Harnessing Equipmen inventors Recieving their Gandhian Young Technological Innovation Award

Leave A Reply

Your email address will not be published.