இராவணன் பச்சைத் தமிழன் தான்; இதோ வலுவான ஆதாரம்!

0

இலங்கேஸ்வரன் என்றும் இராவணேஸ்வரன் என்றும் ஈஸ்வரன் சிவனுக்கு இணையான ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர் என அழைக்கப்படும் இராவணன் பற்றி தற்போது இலங்கையில் பல சர்ச்சைகள் நிலவிவருகின்றன.

குறிப்பாக சிங்கள மக்கள் இராவணனை தமது மூதாதையர் என குறிப்பிட்டு வழிபட்டுவருவது தென்னிலங்கையில் முக்கிய அம்சமாக மாறிவருகிறது.

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களுள் சிறப்புற்று விளங்கும் மன்னார் மாவட்டம் திருக்கேதீச்சரம் மற்றும் திருகோணமலை மாவட்டம் திருக்கோணேச்சரம் ஆகியன இராவணனால் பூஜிக்கப்பட்டதென்றும் இராவணனின் அன்னையால் வழிபாடு செய்யப்பட்டதென்றும் ஈழத்தமிழ் வரலாற்றுக் குறிப்புக்கள் இயம்புகின்றன.

இந்த நிலையில் இராவணன் யார் என்ற சர்ச்சை இலங்கையில் எழுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்ற விடயம்தான் சிங்களவர்கள் கூறும் கதைகள்.

தமிழ் மக்கள் முழுமையாகவே நம்புகின்றனர் இராவணன் ஒரு தமிழன் என்பதையும் சிவனை வழிபட்ட வீர சைவன் என்பதையும். இதுகுறித்து இராவணன் யார் என்பதை ஆய்வாளர் திருச்செல்வம் கூறும் சந்தர்பத்தை சக்கரவியூகம் நிகழ்ச்சியில் காணுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.