இலங்கையில் இப்படியும் ஓர் பொலிஸாரா?குவியும் பாராட்டுக்கள் ! சேவைக்கு ஓர் உதாரணம் ! படங்கள் உள்ளே

0

இலங்கையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் யக்கல பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி ஒன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் வீதி முழுவதும் மணல் பரவி கிடந்துள்ளது.

இதனால் வீதியில் ஏனைய வாகனங்களுக்கு பயணிக்க முடியாத அளவு சிரமங்கள் ஏற்பட்டது. எனினும் அந்த மணலை அகற்ற எவரும் முன்வரவில்லை. மணலை அகற்றவில்லை என்றால் இன்னுமொரு விபத்து ஏற்படும் என்பதனால், பொலிஸ் அதிகாரி ஒருவர் தனியாக அந்த மணலை அகற்றியுள்ளார்.

பொதுவாக இலங்கை பொலிஸார் மீது தவறான பெயர் ஒன்றே உள்ள நிலையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எடுத்துக்காட்டாகும். இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.