இளவரசி பட்டத்தை துறந்து சாதாரண இளைஞனை மணந்த ஜப்பான் இளவரசி

0

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான அய்கோ, தனது சாமானிய காதலரான கெய் குமுரோவை நேற்றைய தினம் மணந்தார்.

ஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் இளவரசி அய்கோ(28). இவர் கடந்த 2013ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்தபோது அவருக்கும், அங்கு சட்ட ஆலோசகராக பணியாற்றிய கெய் குமுரோவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அய்கோ-குமுரோவின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இவர்களது திருமணம் 2020 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி அய்கோ-குமுரோ திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று இனிதே நிறைவு பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.