இவள் பிள்ளை பெறாதவளா? அரக்கிகளுக்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு!

0

இலங்கையில் அரக்கிகள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவள் ஒரு எடுத்துக்காட்டு…

இவள் பிள்ளை பெறாதவளா?

இல்லை, கல்யாணமே ஆகாதவளா?

சுமந்திரனின் சொல் கேட்டு

அதன்படி அறிக்கை விடும் பாவையா..?

இனி படியுங்கள்.

‘அரசியல் கைதிகள் எவருமில்லை’: நீதியமைச்சர் திட்டவட்டம்

இலங்கையில் ‘அரசியல் கைதிகள் என எவருமில்லை’ எனத் தாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம்(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூறுவது போன்று அரசியல் கைதிகள் என யாரும் சிறைச்சாலைகளில் இல்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களும், நீதிமன்ற விசாரணையில் இருப்பவர்களும், விசாரணைக்காக காத்திருப்பவர்களும் தான் சிறைகளிலுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது இதனை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மனக்குறைகளைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.