ஈபிடிபி கட்சியை சேர்ந்த சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் கிளிநொச்சி சாந்தபுரம் அ.த.க பாடசாலை அதிபர் க. கணேசனுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிரட்டல்களை விடுத்துள்ளனர். பாலியல் புகார்களை தெரிவித்து அதிபரை களங்கப்படுத்துவோம் என்றும் சந்திரகுமார் ஆதரவுக் குழு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது.
அதிபர் கணேசன், தனது பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் ஒன்றை அண்மையில் திறந்ததுள்ளார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதிதியாக அழைத்துள்ளார். இதனை கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் கட்சியில் எம்பியாக இருந்த சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை.
இந்த நிலையில் சாந்தபுரம் பாடசாலை அதிபர் கணேசனின் முகப்புத்தகத்தில் நீங்கள் பெண்களுடன் கண்டபடி தொடர்புகளை வைத்துள்ளவர் என்றும் இதனை சமூக வலைத்தளங்களில் எழுதுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் அதிபர் கணேசன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அதிபர் கணேசன், சாந்தபுரம் அ.த.க பாடசாலையை பின்தங்கிய நிலையில் இருந்து பல்வேறு முயற்சிகளின் ஊடாக முன்னோக்கி வளர்த்தெடுத்து வருகின்றார். அரசியல்வாதிகள், சமூக அக்கறையாளர்களின் உதவிகளை பெற்று பாடசாலையை வளர்க்கும் இவரை கட்சி அரசியலுக்காக சந்திரகுமார் குழு அச்சுறுத்துகின்றது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மக்களையும் அரச திணைக்களையும் அதிபர்களையும் அடக்கி தமது ஆட்சி அதிகாரங்களுக்கான நலன்களை மிரட்டி பெற்றுக் கொண்ட சந்திரகுமார், தற்போது மக்களால் தூக்கி எறியப்பட்ட நிலையில் ஒருசிலரை கொண்ட தனது குழுவை வைத்து அடிதடி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.