உயர்ந்த மனிதன்! இந்துக்களின் பிரசாதத்தை உண்ணும் முஸ்லீம் கல்விமான்!

0

பல முஸ்லீம்களும் சில கிறிஸ்தவர்களும் இந்துக்களின் பிரசாதத்தை சாப்பிடுவதில்லை. தெரிந்த ஒரு முஸ்லீம் கல்விமான் இருக்கிறார், அவர் இந்துக்கள் வழிபாட்டில் வைத்த பிரசாதத்தை ரசித்து ருசித்து உண்பார்.

ஒரு தடவை “இது உங்கள் மார்க்கத்துக்கு முரணானதில்லையா?” என்று கேட்டேன்.

“நான் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட பொருளை உண்டிருந்தால், நீங்கள் அப்படிக்கேட்டிருக்கலாம், இந்தப்பொருள்கள் எதுவும் ஹராமானதில்லையே? ஆரோக்கியமான உணவுதானே அதை உண்பதில் தவறில்லையே?”

“இல்ல, சேர் இன்னொரு கடவுளுக்கு படைக்கப்பட்டதை, நீங்க உண்ணலாமா?”

“இன்னொரு கடவுளா? என்னைப்பொறுத்தவரை அல்லா ஒருவன்தான் கடவுள். அதில் நான் தெளிவாக இருக்கிறேன். நீங்கள் கடவுளுக்குப்படைத்தீர்கள் என்று நான் சொன்னால் அல்லாவுக்கு நிகராக நான் இன்னுமொன்றை ஏற்றுக்கொண்டவனாகிவிடுவேன்”

“அப்படியென்றால், இந்த பூசை தேவார ஆராதனையெல்லாம்?”

(சிரிக்கிறார்…)

“இப்ப நாம நட்சத்திர ஹொட்டேல்களுக்கு போகிறோம், அங்க சாப்பாடுகளை வரிசையாக அடுக்கி சாப்பாட்டு நேரத்தில் பாட்டுப்பாடி வாத்தியங்கள் இசைப்பார்களே கவனித்திருக்கிறீர்களா? எனது பார்வையில் நல்லதொரு இசையைக்கேட்டுவிட்டு சாப்பிடுகிறேன் அவ்வளவுதான். உங்களுக்கு அது கடவுள் வழிபாடு எனக்கு அது இசை. அல்லா பகிர்ந்து உண்ணுதலை கட்டாயமாக்கியுள்ளான், உணவை வீண்விரயம் செய்வது கூடாது, பரஸ்பர அன்பை உணர்த்த அல்லாவே இந்த உணவை எனக்கு தந்துள்ளான் என்று பார்க்கிறேன்.”

Leave A Reply

Your email address will not be published.