உலகம் முழுவதும் யூடியூப் இணையதளம் முடக்கம் ! தொழிநுட்ப கோளாறு காரணம்

0
கூகுளின் பிரபல சமூக வலைதளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.
இண்டர்நெட்டில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். பொழுதுபோக்கில் துவங்கி செய்திகள், மற்றும் பல்வேறு தகவல்களை யூடியூப் மூலம் நாம் தினமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுக்க யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

யூடியூப் வேலை செய்யாதது குறித்த உங்களது தகவலுக்கு நன்றி. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும், தடங்கல்களுக்கு வருந்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.