ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு காதல் ஜோடி தற்கொலை! இறப்பிலும் பிரியாத தூய காதல் ! படம் உள்ளே

0

தமிழகம் ஒசூர் அருகில் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகிலுள்ள தேன் கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் அனுமப்பா. இவரது மகன் ஏமண்ணா 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவர்களது வீட்டிற்கு எதிரில் சூரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரம்மா (21) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், சூரம்மா மற்றும் ஏமண்ணா இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு யாரும் மறுப்புச் சொல்ல மாட்டார்களென இருவரும் கருதியுள்ளனர். இந்த நிலையில், இருவரது குடும்பத்திற்குமிடையில் சண்டை ஏற்பட்டு அது முன்விரோதமாக மாறியுள்ளது.

இதனால், காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று கருதிய இருவரும் நேற்றிரவு(04)10 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் பின்னர் புளியமரத்தில் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். காலையில் அவ்வழியாகச் சென்றவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.