ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் – பிரதமர் மோடி

0

இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், நர்மதா அருகே கெவாடியா கிராமத்தில் சர்தார் சரோவர் அணை பகுதியில் கட்டப்பட்ட சிலைலை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.

வல்லபாய் படேலின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்ததில் பெருமிதம் அடைகிறேன். இரும்பு மனிதர் சர்தார் பட்டேலின் பிறந்தநாளை, ஒற்றுமை தினமாக தேசமே கொண்டாடுகிறது.

பட்டேல் சிலையை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம். பட்டேல் சிலை திறக்கப்பட்ட இந்நாள் இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கும்.

இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும். குஜராத் முதல்வராக இருந்தபோது அறிவித்த சிலையை பிரதமராக திறந்துவைத்ததில் பெருமை.

இந்தியா இன்றளவும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி” என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.