கடும் வாக்குவாதத்தில் முடிந்த பத்திரிகையாளர் சந்திப்பு! கைகூப்பி மன்றாடிய சின்மயி!! வீடியே இணைப்பு!!

0

சின்மயி ஏன் திரைத்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு நம்பிக்கை இல்லை என்பதால்தான் அவர் புகார் அளிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்ப்டப் பின்னணிப் பாடகி சின்மயி, இயக்குநர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் சார்பில் மீ டூவுக்கு முன்னர் திரைத்துறையைச் சார்ந்த நீங்கள் திரைத்துறையில் இதற்கான புகாரை ஏன் அளிக்கவில்லை. திரைத்துறையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்விக்கு அதுகுறித்து தனக்கு தெரியாது என்று தெரிவித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நீங்கள் முதிர்ச்சியான நபர் திரைத்துறையில் ஏன் விசாகா கமிட்டி ஏன் இல்லை என்ற கேள்வியை ஏன் எழுப்பவில்லை என்று சின்மயியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டார். ’’மீ டூ மூவ்மென்ட் இல்லாமல் சின்மயி இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தால் இதை நீங்கள் எப்படி அணுகி இருப்பீர்கள், இதை திரைத்துறை சங்கத்தில் சொல்லியிருந்தால் அவர்கள் இதை உண்மையாக அணுகி இருப்பார்களா? நீங்கள் சொல்லுங்கள்’’ என பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதையும் நீங்களே சொல்லுங்கள் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ’’கண்டிப்பாக நம்பிக்கை இல்லாததால் தான் இவ்வளவு நாட்கள் சின்மயி பேசவில்லை. திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாகவே யாருக்கும் அந்த தைரியம் இல்லை’’ என்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அப்படியானால் எதற்கு ஒரு சங்கம் அதற்கு தேர்தலில் ஓட்டு போட்டீர்கள் பத்திரிகையாளர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினர். ’’இந்த சமுதாயத்தில்தானே இருக்கிறோம், சமுதாயத்தின் மீதே நம்பிக்கை இல்லை, அதற்காக வெளியே போகிறேன் என்று சொல்லமுடியுமா?’’ என லட்சுமி ராமகிருஷ்ணன் மழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.