கபொத சாதாரண தரத்தில் 3 பாடங்களை நீக்க தீர்மானம் ?மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0

கல்விப்பொதுத்தராதர  சாதாரண தரப் பரீட்சைக்குறிய 9 பாடங்களை 6 பாடங்களாக குறைப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இது தொடர்பாக உரையாற்றிய அமைச்சர் எதிர்காலத்தில் கல்வியில் புதிய மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதன்போது தேவையில்லாத பாடங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பிரதான பாடத்தொகுதியில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய திட்டத்தின் மூலம்  மாணவர்களின் கல்விச்சுமை குறைக்கப்படுவதுடன் வேலை உலகு எதிர்பார்க்கும் தகைமைகளை பெற்றுக்கொள்ள அடித்தளமாக அமையும் என்று கல்விமான்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் .இந்த திட்டம் அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது .

 

Leave A Reply

Your email address will not be published.