காதலன் கொடுத்த விபரீத பிறந்தநாள் பரிசு ! உயிரிழந்த காதலி..!! நடந்தது என்ன ?

0

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. ஒரே மகள் சரஸ்வதி. பி.எஸ்.சி. நர்சிங் முடித்த இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். சரஸ்வதியும், ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த கார்த்திகேயனும் 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்திருந்த சரஸ்வதிக்கு இன்று  பிறந்தநாள்.இதை முன்னிட்டு அவரது வீட்டில் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில், சரஸ்வதி காதலனான வேலூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவில் பணியாற்றி வரும் கார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.கொண்டாட்டத்திற்கு பின் சரஸ்வதியின் தந்தையும், சகோதரியும் மற்றொரு அறையில் இருக்க, சரஸ்வதியிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடிரென சரஸ்வதிக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

சுமார் 2 மணிவரை நீடித்த இந்த வாக்குவாதம் முடிவை எட்டவில்லை. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரஸ்வதியை சுட்டுக்கொலை செய்த கார்த்திகேயன், தொடர்ந்து தானும் சுட்டுகொண்டு இறந்துவிட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த சரஸ்வதியின் தந்தை மகள் இறந்து கிடந்ததை பார்த்து கதறியுள்ளார் .நள்ளிரவில் அரங்கேறிய இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் சூழ்ந்தது. இருவரது சடலங்களையும் மீட்ட போலீசார் சம்பவத்தை குறித்து பொலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.