கிளிநொச்சியில் ஊடக தர்மம் இல்லை! எல்லாம் கட்சி ஊடகங்கள்!! கல்வி ஆலோசகர் பெ. கணேசன்

0

கிளிநொச்சி போருக்குள் இருந்து தலையை கழற்றி தலைநிமிரும் தருணம் இது… பாராளுமன்ற அரசியலை மக்கள் ஏற்று நடக்கும் காலம் பல அரசியல் கட்சிகளும் இங்கு தத்தமது வழிகளால் மக்களை கடைத்தேற்றமுடியும் என நம்பிக்கை ஊட்டி தாமும் சீவிக்கிறார்கள் இது ஜனநாயக நாட்டின் இயல்புகளில் ஒன்று

இங்கு எவரும் துாய்மையான சிந்தனையோடு மகாத்மாகாந்தி நெல்சன் மண்டேலா மாட்டின் லுாதர்கிங் ஏப்ரகாம்வி்ங்கன் அரசியல் செய்வதாக எண்ணமுடியவில்லை ஆனால் எதிர்காலத்தில் இப்படி ஒரு சில அரசியல் வாதிகள் தோன்றக்கூடும் மாறக்கூடும் ஏனெனில் வரலாற்றுக்காலம் அவ்வாறானவர்களை தோற்றுவிக்கும்

சர்வாதிகாரம் எதேச்சாதிகாரம் நடந்த உலகத்தில்தான் ஜனநாயகம் முளைத்தது கொடுமைகள் அடிமைத்தனங்கள் நடந்த அமரிக்காவில்தான் விங்கள் அடிமைத்னத்தை களைந்தார் எனவே காலம் சுழற்சிமிக்கது

கிளிநொச்சியில் ஊடக தர்மம் இல்லை இதனால் ஊடகவியலாளர்கள் மக்களின் குரலாக இருப்தாக மார்தட்டிக் கொள்ள முடியாது. கட்சி அரசியலுக்கான ஊடகங்கள் வேலை செய்கின்றன பொது சிந்தனையோடு அரசியல் வாதிகளின் செயற்பாடுகளை மக்களுக்கு சொல்ல மறுக்கின்றன .

ஒரு பாடசாலைக்கு பிரதம அதிதியாக வந்த ஒரு அரசியல்வாதியின் கருத்தை இருட்டடிப்புச்செய்வது ஊடக தர்மமா?

இங்கு அரசியல்வாதி யாராக இருந்தாலும் அவரது அதிகாரம் மக்கள் ஆணையினால் கிடைத்தது எனவே ஊடகம் அந்த மக்களை மதிக்கவில்லை ஒரு பெரிய ஊடக நிறுவனத்தின் செய்தி முகவர்களாக இருக்கும் ஊடகவியலாளர்கள் அந்த நிகழ்ச்சியின் பிரதான கருத்தை ஊடகத்தில் பதிவு செய்யாது இருட்டடிப்புச் செ்ய்தது தர்மத்துக்கு விரோதமானது ….

மாறாக முக்கியமல்லாத பிரமுகர்களின் கருத்தை வெளிக்கொணர்வது மக்கள் பிரதிநிதிகளை அவமதிப்பதே இதனால் இந்த அரசியல்வாதிகள் விரோதமாக பொறுப்பற்று நடக்க காலமைத்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாது போக திட்டமிட்டு ஊடகவியலாளர்கள் செயற்படுவது மகாமூடமை

எவராகவும் இருக்கலாம் எந்த கட்சியாகவும் இருக்கலாம் சர்வதேச ஊடகத்தின் பிரதிநிதியாக இருப்பவர்கள் உள்ளதை உள்ளபடி பதிவுசெய்யாது விட்டால் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் அகக்காட்சிகள் மக்களுக்கு செல்லாது வாக்களிப்பில் பிழையான தெரிவையே செய்வார்கள் … அவர்களுக்கான அறிவூட்டத்தை வழங்குபவர்கள் ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சியில் அண்மையில் நடந்த பாடசாலை நிகழ்ச்சியின் பிரதம அதிதியின் கருத்து வெளிக்கொணரப்படவில்லை ஏன் ? “இது தானா கிளிநொச்சியின் ஊடகவியலாளர்களின் தர்மம்

அரசியல் வாதி ஊழல் அதர்மமாக நடக்கிறார்கள் என தம்பட்டம் அடிக்கும் நீங்கள் ஊடகதர்மத்தை பேணுகிறீர்களா? எனவே எறும்புக்கும் தன்கைளால் ஒரு முழம்தான்.

பத்திரிகை எவ்வாறு உத்தியோத்தர்களை சிக்கலுகலுக்குள் மாட்டி விடமுடியுமோ அதனை செய்கிறீர்கள்

எப்பொருன் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதை ஊடகவியலாளர்கள் பின்பற்ற தவறின் இந்தமண் மேலும் சிதைக்கப்படும்

பொறுப்பற்ற செய்திகள் மற்றவர்களுக்கு அநியாயம் நடக்கட்டும் என எழுதப்படும் செ்யதிகள் எந்தளவு ஊடக தர்மத்தை பின்பற்றிவை ?

பாடசாலையில் கல்வி பற்றி பேசிய இரண்டு கலைஞர்களின் கருத்துக்கள் இருட்டடிப்பச் செ்யப்பட்டு இரண்டு பத்திரிகைகளும் அவர்கள் அரசியல் பேசியது போல செய்தியை எழுதியமை விசனத்துக்குரியது … அதேபோல தொலைகடகாட்சி பிரதமத அதிதியன் கருத்தை இருட்டடிப்பு செ்ய்தது ஏன்?

இவற்றில் தாம் சரியாக நடப்பதாக காட்ட முனையக் கூடாது இது பொறுப்பற்ற செயல் இதனால் பத்திரிகைக்கு நம்பகத்தன்மை வராது சமூகம் சிந்தனை வளர்ச்சி பெறாது யதார்த்தம் துலங்காது நாடு சிதைவுறும் மக்கள் அறிவற்று இருப்பர் ……கூட்டு உழைப்பால் இந்த உலகை வாழவைக்க வேண்டும்…ஒருகையால் அல்ல.

தங்கள் தங்கள் கட்சி ஒருபுறமிருக்க ஊடகவியலாளனாக நடு நிலைதவறாது செய்தியை பகிருங்கள்

உலகியல்வழக்கை பேணுங்கள் .. பொய்செய்தி எழுதுவதால் யார் யார்ரெல்லாம் பாதிக்கப்படுவர் என சிந்தியுங்கள்

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி போதாது அறிவு திறன் மனப்பாங்கு வளரவில்லை என இங்கு அழுத்தமாக பதிவு செய்கிறேன் இதனால் கிளிநொச்சி மக்கள் மட்டுமல்ல ஏனையோருக்கும் பிழையான வழிகாட்டல்கள் தகவல்கள் கொடுத்து உலகை சிதைக்கிறீர்கள் என்பதனை ஊடகவியலாளர்களுக்கு வேதனையோடு முன்வைக்கிறேன்
இனிமேலாவது பாரபட்சமின்றி செய்தி தயாரிக்கவும்

அரசியலில் ஈடுபட விரும்பின் ஊடகத்தை கைவிட்டு வேறு நபர்களுக்கு வழிவிடுங்கள்

அதேவேளை தர்மத்துக்காக குரல்கொடுத்த ஒருவரலாற்றை ஒரு நீதியை நிலைநாட்ட பாடுபட்ட ஊடகவியலாளர்களும் மக்களின் வலிகளை உரத்துச் சொல்லியபடி இருக்கும் ஊடக வியலாளர்களும் அரசியல் பிழைத்தோரை தடுத்து உண்மையை வாழவைத்த ஊடக வியலாளர்களும் இந்த மண்ணில் சிறப்பாக பெருமைப்படும் கருத்துக்களை உருவாக்கியபடி இருக்கிறார்கள்…

அவர்கள் தமது அரசில் சிந்தனைகளை ஒருபுரம் தள்ளி பொது மக்களின் நன்மைக்காக இயங்கியலை பேசி அரசில்வாதிகளை திசைகோட் படுத்துகிறார்கள் நாடு நலம்பெற எண்ணுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதனால் அரசியல்வாதிகள் தான்தோன்றித்தனமாக நடக்காது பார்த்து மக்களை காக்கிறார்கள்.
அப்பாவிகளை பொது மக்களை அரச உத்தியோகத்தர்களை காக்கிறார்கள் என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும்….

அதனை அவர்கள் எப்போதும் செய்வார்கள் அவர்களிடம் அடிப்படையில் சுபீட்சமான மக்கள் வாழ்க்கை பற்றிய கனவும் நினைவும் இருக்கிறது. அதுவே ஊடக தர்மம் …..

Leave A Reply

Your email address will not be published.