சந்திரகுமார் கீதாஞ்சலியுடன் என்ன செய்தார் தெரியுமா? பகுதி 01! சு. சுரேன்

0

தோழர் சந்திரகுமாரின் விடுதலை மீதான காதல்… PART 01

2018.10.01 கிளிநொச்சியில் அதிசயமாகவும் ஆனால் உண்மையாகவும் ஒரு விடயம் நிகழ்ந்தது அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஈபிடிபி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார். 119 பேர் அதில் கலந்து கொண்டனர். வானளாவ எழுந்த உணர்ச்சி கோஷங்கள் நடுவே சந்திரகுமாரை பார்க்க முடிந்தது.

அவர் அருகே ஆயிரம் பேரை கொன்ற CVF மற்றும் திரிஸ்டார் (ENDLF) எனும் கொலைக்கும்பல்களின் தலைவரான ஒரிசா புகழ் வரதராஜ பெருமாளும் கோஷம் எழுப்பினார் இதை பார்க்கின்ற போது ‘இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டடிலே’ என்ற பாடல் அடிகள் எங்கள் நெஞ்சங்களில் இசை ஆடியது.

தோழர் அசோக் என்ற பெயரில் EPRLF என்னும் ஆயுத குழுவில் இணைத்திருந்த சந்திரகுமார் அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த போதே பத்மநாபா விற்கு துரோகம் செய்து EPRLF ஐ விட்டு வெளியேறிய அதிவிசேட ஆயுததாரியான டக்ளஸ் உடன் வெளியேறி தனது சொந்த இனத்தை அழித்தவர்களில் பிரதான பங்கு வகித்தவர் இவர். இங்கே தான் தனது துரோக தனத்தின் முதலாவது அத்தியாயத்தை ஆரம்பித்தார் சந்திரகுமார் அரசியல் தொடர்பான துரோகத்தை பத்மநாபாவிற்க்கு இழைக்கிறார்.

பின்னர் ஈபிடிபி உடன் சேர்ந்து புலிகளுக்கு சார்பான தமிழ் தேசிய இளைஞ்ர்களை கொன்றொழித்தவர் இவராவார். இக் காலத்திற்க்கு முன்பு சூளை மேட்டில் டக்ளஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு படுகொலை காரணமாக இந்தியாவில் சிறை பிடிக்கப்பட்டிருந்தார். அந்த வேளை ஈபிடிபி யின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு அன்றே சந்திரகுமார் முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் ஈபிடிபி யில் உறுப்பினராக இருந்த சின்ன ஐயர் எனப்படுபவர் மதிநுட்பத்தோடு செயற்பட்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜய ரட்ன அவர்களை இந்திய தரப்போடு பேச வைத்து டக்ளஸை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த டீலில் புலிகளுக்கு எதிராக ஒரு துணை ராணுவமாக இயங்குவதற்கு டக்ளஸ் சம்மதித்திருந்தார். இதன் காரணமாக டக்ளசின் தலைமைக்கு எதிரான சந்திரகுமாரின் துரோகம் தாமதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஈபிடிபியின் நெப்போலிய புலி சுத்திகரிப்பு அணியில் தீவிரமாக இயங்கி பல நூற்றுக்கணக்கான இளைஞ்ர்களை தீவக பரப்பில் சுட்டு மண்கும்பான் மணல் மேடுகளில் புதைத்தவர் இவராவார். தனது அதி தீவிர விசுவாசத்தை டக்ளசுக்கு காண்பிப்பதற்காக தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தோழர் அற்புதனை புலி ஆதரவாளராக காண்பித்தவர்.

அல்பிரட் துரையப்பா தொடக்கம் காமினி திஸாநாயக்கா வரை என்கின்ற அற்புதனின் நடுநிலை கட்டுரைகளை புலிக்கு ஆதரவான கட்டுரைகள் என டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு சகோதரரான தயானந்தா ஊடாக போட்டுக்கொடுத்தவர். அதனால் தோழர் அற்புதனை சுடுகின்ற பொறுப்பை டக்ளஸிடமிருந்து பெற்று தனது திருக்கரங்களாலேயே சுட்டு படுகொலை செய்தவர் இந்த சந்திரகுமார். இத்தகைய ஒருவர் அரசியல் கைதிகளை விடுதலை செய் என்று குரல் எழுப்பிய போது தமிழ் தேசிய நெஞ்சங்கள் மீது துரோகத்தின் சம்மட்டிகளால் ஓங்கி அடித்ததாகவே உணர முடிந்தது. துரோகங்களின் தொடர் அடுத்த வாரமும் நீளும் ….

சுப்பிரமணியம் சுரேன், தவிசாளர், பச்சிளைப் பள்ளி பிரதேச சபை.

சந்திரகுமார் கீதாஞ்சலியுடன் அடித்த கூத்து https://www.tamilwin.com/show-WAplnRqg2I42F.html?ref=archive

Leave A Reply

Your email address will not be published.