குரங்குகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அடம்பிடித்த வினோத சம்பவம் ! அதிர்ந்து போன பொலிஸார்

0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பத் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் தரம்பால் சிங். இவருக்கு வயது 72 ஆகிறது. இவர் தன் பக்கம் உள்ள ஒரு காட்டு பகுதியில் விறகு, சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டடத்தில் குரங்கு கூட்டமொன்று இருந்தது.

தரம்பால் சிங் விறகு பொறுக்குவதைக் கண்ட அந்த குரங்குகள், அங்கிருந்த செங்கல் மற்றும் கற்களை கொண்டு தரம்பால் சிங்கைத் தாக்கத் தொடங்கின.

இதனால், அவர் படுகாயமடைந்து விழுந்தார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் உடனடியாகத் தரம்பாலை தூக்கிக் கொண்டு சென்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஆனால், தரம்பால் சிங் சிகிச்சை பலனின்றிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தனர்.

எனவே, நேராகப் பொலிசாரிடம் சென்ற அவர்கள் தரம்பால் சிங்கின் உயிரிழப்புக்குக் காரணமான குரங்குகள் மீது வழக்குப் பதிய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

கெஞ்சிய குடும்பத்தார்

இதனைக் கேட்டு அரண்டுபோன பொலிஸார் “குரங்கு மீது எல்லாம் வழக்கு போட முடியாது, குரங்கு என்றில்லை எந்த விலங்குகள் மீதும் வழக்குப் போட முடியாது” என்றனர்.

ஆனால், குடும்பத்தாரோ அழுது கொண்டே எப்ஐஆர் போடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேயிருந்தனர்.

மேலதிகாரிகளுக்கு கடிதம்

தொடர்ந்து பொலிஸார் மறுக்கவும் “சம்பந்தப்பட்ட குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டே ஆக வேண்டும்” என்று மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதப் போவதாக குடும்பத்தினர் தெரிவித்து விட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.