கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் மக்கள்!

0

மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் எங்­க­ளது பிள்­ளை­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். எனவே மகிந்­தவைக் கூட்­ட­ மைப்பு ஆத­ரிக்­கக் கூடாது என்று கிளி­நொச்சி மாவட்ட காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் வலிந்து காணா­மல் ஆக்­க­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தொடர்­சி­யாக 663 நாளாக தொடர் கவ­ன­வீர்ப்பு போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

தற்­போது மகிந்த ராஜ­பக்சவை அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­ சிறிசேன தலைமை அமைச்­ச­ராக

நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னர் மகிந்த ராஜ­பக்­சவுக்கு ஆத­ர­வினை வழங்கக் கூடாது. அவ­ரின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே எமது பிள்­ளை­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். சாதா­ரண நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மகிந்த இருந்த போது அவர் மீது விசா­ர­ணை களை ஆரம்­பிக்­காத மைத்­திரி அரசு தற்­போது தலைமை அமைச்­சர் பத­வியை வழங்­கி­யுள்­ளது.

இந்த நிலை­யில் அவர் மீது விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. எனவே

அவ­ருக்­கான ஆத­ர­வினை வழங்கக்கூடாது. அவ்­வாறு தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னர் ஆத­ர­வினை

வழங்­கு­வார்­கள் ஆனால் அவர்­கள் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுக்­கும் செய்­யும் துரோ­கம் என்று கிளி­நொச்சி மாவட்­டத்­தில் வலிந்து காணா­மல் ஆக்­க­ப்பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Leave A Reply

Your email address will not be published.