கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசி தானும் குதித்த தாய்! (படங்கள்)

0

ஐந்து குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கிணற்றில் குதித்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் குறித்த பெண்ணும் அவரது மூத்த பெண்ணும் காப்பாறபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள பாஞ்ச் பிப்லா கிராமத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த கீதா பாலியா எனும் பெண் தனது ஐந்து குழந்தைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கிணற்றில் தனது ஐந்து குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்தார்.

இதனையடுத்து கிராமவாசிகள் சிலர், இவர்க்ளைக் காப்பாற்றும் நோக்கத்தில் கிணற்றில் குதித்தனர். ஆனாலும் சம்பவத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.

கீதா பாலியாவும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவுமே உயிருடன் மீண்டனர்.

கீதா பாலியாவை பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது, ”கடந்த 2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.