கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி!!

0

கொழும்பு நகரின் பிரதான வீதியொன்று திடீரென தாழிறங்கியுள்ளது.

நாரஹென்பிட்டி சித்ரா லேன் பகுதியிலேயே இவ்வாறு நிலம் திடீரென தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தவானை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த பாதை ஊடாக பயணிப்பவர்களை வேறு வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.