கொழும்பில் 20 பெண்கள் உட்பட 80 பேர் அதிரடியாக கைது ! நடந்தது என்ன ?

0

கொழும்பில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் 80 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை ரயில் நிலையத்தில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் 20 பெண்கள் உட்பட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

172 இலக்கம் கொண்ட ரயிலில் பயணிகளிடம் பயணசீட்டு சோதனையிட்ட போது குறித்த 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பயண சீட்டு இன்றி பயணித்த 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து 42 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறிவிடும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை ரயில் நிலையத்தில் மாலை 04.00-06.00 மணி வரையிலான இரண்டு மணித்தியால காலப்பகுதியில் பயணசீட்டு பெற்று கொள்ளாமல் பயணிக்க வந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் அலுவலக பணியாளர்கள் எனவும், இவர்கள் தினமும் பயணசீட்டு பெற்றுக்கொள்ளாமல் ரயிலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.

அதேபோன்று குறித்த ரயிலில் பயணித்த மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 மணித்தியாலத்தில் 80 பேரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றால் நாள் ஒன்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் இவ்வாறு பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான அதிரடி கைதி மூலம் ரயில் பயணிகள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.