“சத்தமிட்டால் வெட்டுவோம்” என கழுத்தில் வாள் வைத்து மிரட்டி பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையர்கள் சுருட்டிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(16) அதிகாலை யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி வீட்டின் சமையலறை புகைப் போக்கி வழியாக உள்நுழைந்த ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் வாள்களை வைத்து “சத்தமிட்டால் வெட்டுவோம்” எனக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீடு முழுவதும் சல்லடையிட்டுத் தேடிய குறித்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த பெறுமதியான தங்கநகைகள், பணம் என்பவற்றைச் சுருட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.