சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் – ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

0

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தில் விஜய் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். #SarkarAudioLaunch #Vijay

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது,

விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். முதல் படம் துப்பாக்கி பண்ணும் போது, அவருடைய படங்களை முதலில் பார்துவிட்டு நான் ஒரு கணக்கில் இருந்தேன். என்னுடைய கதையை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் விஜய் சார். அவருடைய திறமைக்கு ஏற்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கத்தி படம் பண்ணோம். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து சர்கார் படம் பண்ணியிருக்கிறேன்.

என்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி என்னால் பெரியதாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். உங்களுக்கும் அது தோன்றும். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது.

அவர் மனதில் ஒன்று தோன்றினால் அதை உடனடியாக செய்துவிடுவார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு தடைபட்ட உடனே, திடீரென கிளம்பி தூத்துக்குடி சென்றுவிட்டார். அதுதான் உங்களுக்கே தெரியுமே.

விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன். #SarkarAudioLaunch #Vijay

Leave A Reply

Your email address will not be published.