சற்றுமுன் வவுனியாவில் விபத்து ! இளைஞன் உயிரிழப்பு ! படங்கள் இணைப்பு

0

வவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு வவுனியாவில் இன்று (15.10) காலை ஓமந்தைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது இதன்போது பின்னால் வந்த பேருந்தில் குறித்த இளைஞனை மோதியபோது விபத்து இடம்பெற்றுள்ளது இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் கனகராயன்குளம் 561படை பிரிவை சேர்ந்த இரானுவ வீரரான 33வயதுடைய ஒஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார் தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.