சற்று முன் வவுனியாவில் கோர விபத்து -வங்கி ஊழியர் உட்பட இருவர் பலி ! படங்கள் உள்ளே

0

இன்று மாலை வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி : ஒருவர் காயம் வவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று (11.10.2018) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை மயிழங்குளம் பகுதியை சேர்ந்த வவுனியா பசார் வீதி பதிவையுடைய முச்சக்கர வண்டியின் சாரதியான ராஜகருணா வயது -58 ,வவுனியா இலங்கை வங்கியின் உத்தியோகத்தரான பெரியதம்பனை பகுதியை சேர்ந்த த.பாஸ்கரன் வயது – 42 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் இதேவேளை வவுனியா இலங்கை வங்கியில் காவலாலியாக பணி புரியும் கூமாங்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் விஜிதரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வங்கி ஊழியர் பாஸ்கரன்.

Leave A Reply

Your email address will not be published.