டெல்லியின் முன்னாள் முதல்மந்திரி மதன் லால் குரானா மரணம்

0

பாஜகவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், டெல்லியில் முன்னாள் முதல்மந்திரியுமான மதன்லால் குரானா மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டெல்லியின் முன்னாள் முதல்மந்திரி மதன் லால் குரானா மரணம்
புதுடெல்லி:

பாஜகவின் மூத்த தலைவரான மதன்லால் குரானா 1936-ம் ஆண்டு பிறந்தவர். 82 வயதான இவர், 1993-96 ஆகிய காலகட்டத்தில் டெல்லியின் முதல்மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர பிரச்சாகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2004-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.

வயது மூப்பினால் ஏற்படும் உடல்நலக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வந்த மதன்லால் குரானா டெல்லியில் இன்று மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.