தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படமாக உருவாகின்றது ! பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா !

0
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் மறைந்த சினிமா பிரபலங்களையும், தலைவர்களின் வாழக்கை வரலாற்று படங்களை எடுப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.  அந்த வரிசையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில்  பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று  அனைத்தையும், இதில் காட்சிபடுத்துகின்றனர்.
ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறார். சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
பாபி சிம்ஹா நடித்து சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில், இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.