திருநங்கைகள் விழாவில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் காம்பீர் ! நல்ல உள்ளம் கொண்ட நல்ல மனிதன்

0
இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு வருடங்களுக்கு  முன் கேப்டனாகவும் தொடக்க வீரராகவும்,இறங்கி மிகச் சிறப்பாக விளையாடி வந்தார் கவுதம் காம்பீர். ஐபிஎல் சீசனிலும் முன்பு கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார்.
தற்போது உள்ளூர் விளையாட்டு போட்டிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் புது டெல்லியில் நடைபெற்ற ஹிஜ்ரா ஹரப்பா எனப்படும் திருநங்கைகள் விழாவில் காம்பீர் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்துள்ளார்.
வட இந்தியாவில் குறிப்பாக திருநம்பி திருநங்கைகளிடையே இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கவுதம் காம்பீர் இவ்விழாவில் கலந்து கொண்டது பற்றி பலரும் அவரை பாரட்டி சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
காம்பீர் புடவை கட்டிகொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போன்ற புகைப்படம்  வைரலாகி வருகிறது என்பத்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.