தென்-இந்தியாவிலிருந்து பலாலி ,மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவை

0

தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான 3 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கிடையில் நேற்று (20) புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை பொலிஸ் நடமாடும் பிரிவை முறையாக ஒழுங்கமைப்பதற்காக, 750 ஜீப் வண்டிகளை வழங்குவதற்கும் இந்திய பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

மேலும், இலங்கையின் பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்காக இந்தியாவில் நடத்தப்படும் பயிற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.