நோர்வேயின் ஒத்துழைத்துளைப்புகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் நன்றி தெரிவிப்பு!

0

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நோர்வே பிரதமருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அரசியல், பொருளாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றின் முன்னேற்றம், மீள்குடியேற்றம், மனித உரிமைகளை வலுப்படுத்தியுள்ளமை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தியுள்ளமை குறித்து நாங்கள் நோர்வே அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தினோம்.

இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நோர்வேயின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

உலகின் தற்போதைய அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவுள்ளோம். இதற்காக நெருக்கமான இணைந்து செயற்பட உள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.