பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானேன் ! மனம் திறந்த நடிகை

0

காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.

அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’ என்று சுனைனா கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.