பாடகி சின்மயி மீண்டும் அதிரடி ! கட்டிலில் தள்ளி வீழ்த்தி என்னை முத்தமிட்டார் ! மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் !
#meToo என்ற ஹாஷ்டேக்கில் தமக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பலரும் பேசி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவில் தற்போது பலரும் தமக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியிட்டு வருகிறார்கள். இதில் இறுதியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபலம் லசித் மலிங்க.
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி சின்மயி பரபரப்பை கிளப்பியிருந்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க மீது நேற்று பெண்ணொருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இந்த ஹாஷ்டேக்கில் சின்மயி குற்றச்சாட்டை சுமத்தியதையடுத்து, சின்மயிக்கு தனிப்பட்ட ரீதியில் சில பெண்கள், பிரபலங்களால் தமக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றிய விபரங்களை வழங்கி வருகிறார்கள். இப்படி, மும்பையை சேர்ந்த இளம்பெண்ணொருவர் அனுப்பிய தகவலை சின்மயி பகிர்ந்துள்ளார்.
அதில் லசித் மலிங்க மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணின் தகவலில், தன்னுடன் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவலை சின்மயி ருவிற்றரில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் சமயத்தில் நடந்ததாக சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். மும்பையில் ஹோட்டலொன்றில் தனது நண்பியை தேடி சென்ற போது, லசித் மலிங்க அவர் தனது அறைக்குள்ளே இருக்கிறார் என்றார். நான் உள்ளே சென்றபோது, நண்பி இல்லை. என்னை மலிங்க கட்டிலில் தள்ளிவீழ்த்தினார். அவரது உடல்நிறையுடன் என்னால் போராட முடியவில்லை. எனது கண்ணையும், வாயையும் இறுக மூடி விட்டேன். எனது முகத்தில் முத்தமிட்டு விட்டார். இந்த சமயத்தில் ஹோட்டல் பணியாளர்கள் வர, நான் குளியலறைக்குள் ஓடிச் சென்று முகத்தை கழுவிக்கொண்டு, அவர்களுடன் வெளியேறி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் பிரபலமான ஆள், ஏன் அவரது அறைக்குள் சென்றாய் என்றுதான் பலரும் கேட்பார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.