பாலியல் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த ஆக்‌ஷன் கிங் ! நடந்தது என்ன

0
பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த குற்றசாட்டிற்கு ஷாக் கொடுக்கும் வகையில், அர்ஜூன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

#MeToo வாயிலாக சுருதி ஹரிகரன், நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அதில் ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார். இறுக்கமாக அணைத்தார் என புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தன் மீது பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது, நடிகர் அர்ஜுன் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அர்ஜுன் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதனால், கன்னட திரைப்பட சங்கம், இந்த பிரச்சனை குறித்து அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் தரப்பு கலந்துரையாட ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.