பாலியல் லஞ்சம் கோரிய வங்கி முகாமையாளர் ! நடு வீதியில் வைத்து வெளுத்த பெண் ! வீடியோ உள்ளே

0

தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண்ணின் தங்கை ரோட்டில் இழுத்து போட்டி அடித்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

கர்நாடகவில், தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அந்த வங்கி மேலாளர் கடன் வேண்டுமென்றால் என்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். இதனால் அந்த பெண் கடன் வேண்டாம் என கூறிவிட்டு, தனது தங்கையிடம் இவை அனைத்தையும் கூறி புலம்பியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தங்கை, வங்கிக்கு சென்று அந்த மேலாளரை வங்கிக்கு வெளியே இழுத்து வந்து பிரம்பாலும், செருப்பாலும் அடித்துள்ளார். இது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தைரியமாக செயல்பட்ட பெண்ணுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.