பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார்!

0

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார்

இந்நிலையில் நடிகர் அர்ஜுனுடன் நிபுணன் என்ற திரைப்படத்தின் கன்னட பதிப்பில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், அர்ஜூனுடன் விஸ்மயா திரைப்படத்தில் அவர் மனைவியாக நடித்தேன்.

அப்போது என்னை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சியில் என்னை வேண்டுமென்றே இறுக்கமாக கட்டி பிடித்தார்.

அவர் தவறாக தொடுகிறார் என்பதை நான் உணர்ந்தேன், ஆனால் அப்போது என்னை சுற்றி 50 பேர் இருந்ததால் செய்வதறியாது திகைத்தேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.