பெற்றோரின் 77 ஆயிரம் பணத்தை தூள் தூளாக்கிய 2 வயது சிறுமி !

0

அமெரிக்காவில் பெற்றோர்கள் சேர்த்து வைத்திருந்த 77 ஆயிரம் மதிப்புமிக்க பணத்தை அவர்களது இரண்டு வயது மகள் தூள்தூளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தாவை சேர்ந்த பென் மற்றும் ஜான் தம்பதியினர் பல காலமாக உழைத்துச் சம்பாதித்த 1383 டாலர் பணத்தை சேகரித்து ஒரு காகித பைக்குள் வைத்திருந்தனர். பணத்தை வீட்டின் அலுமாரியில் வைத்து விட்டுத் தம்பதிகளிருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டுக்கு மீண்டும் வருகை தந்து பார்த்த போது பணமிருந்த காகிதப் பையைக் காணவில்லை.

இதனால்,அதிர்ச்சியடைந்த அவர்கள் வீடு முழுக்கப் பணத்தைத் தேடியுள்ளனர். ஆனால்,கிடைக்கவில்லை. இது அவர்களை மிகவும் கவலையடைச் செய்தது.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தங்களது இரண்டு வயது மகளிடம் தம்பதிகள் கேட்டுள்ளனர். குழந்தை பணம் வைத்திருந்த காகிதப் பையைக் காகிதங்களைக் கத்தரிக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டதாக சொல்லியுள்ளாள்.

உடனே குறித்த இயந்திரத்தைப பார்த்த போது பணம் அடங்கிய பை முற்றிலும் கத்தறிக்கப்பட்டுத் தூள் தூளாக இருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

இதனையடுத்துக் கத்தரிக்கப்பட்ட ரூபா நோட்டுக்களை வங்கியில் கொடுத்தால் இரண்டு ஆண்டு காலத்திற்குப் பின்னர் அவர்களது பணம் ஒப்படைக்கப்படுமென அவர்களது நண்பர் அவர்களிடம் தெரிவித்ததாகத் தகவல் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.