ஒன்லைன் மூலம் நட்பாக கிடைத்த தோழி தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சிறுவன், 6 ஆறாயிரம் கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள காதலியைத் தேடிப்பிடித்து கொலைசெய்துள்ளான்.இச்சம்பவம் ரஷ்யாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கிரில் வொல்ஸ்கி என்ற 16 வயது சிறுவன், ஒன்லைன் (பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப்) மூலம் மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் நட்புடன் பழகிவந்துள்ளான்.நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வரவே, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க மறுத்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் தெரியாமல் மாஸ்கோவிற்கு பயணித்துள்ளான்.
6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.இதனிடையே சிறுமி காணாமற்போனதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளத்தினூடான தொடர்பாடல் பல நன்மைகளைத் தந்தாலும் இப்படியும் நடக்கின்றது என்பது சிந்திக்கவைக்கிறது.