பேஸ்புக் காதல் ! பணம் கறந்து, உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய வாலிபர் ! மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண் வைத்தியர்

0

பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண் மருத்துவரிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணத்திற்கு மறுத்ததால் அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த 22 வயது பொறியியல் படித்த வாலிபருக்கு, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் (23) முகநூல் மூலம் பழக்கமாகியுள்ளார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. எனவே, இருவரும் முகநூலில் நெருங்கி பழக, நாளடைவில் தொலைப்பேசி எண்களை பறிமாறி, வாட்ஸ்-அப் சேட், வீடியோ சேட் என இருவரும் காதலை வளர்த்துள்ளனர்.

இந்நிலையில், அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என வாலிபர் கூற, சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெறப்போவதாக தெரிவித்த அப்பெண் வாலிபரை சந்திக்க சேலம் வந்துள்ளார். அவரை காரில் சென்று வரவேற்ற அந்த வாலிபர், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து அவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களாக இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து, ஜாலியாக ஊரை சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு வந்த போது, அந்த பெண் மருத்துவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரும், ஹோட்டல் ஊழியர்களும் அப்பெண்ணிடம் விசாரித்த போது, அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாகவும், விஷம் குடித்ததாகவும் மாறி மாறி கூறினார். இதனால், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து அப்பெண்ணை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இதனால், சேலம் மருத்துவமனையில் அப்பெண்ணின் உறவினர்கள் குவிந்தனர்.

அப்பெண்ணின் தந்தையும் மருத்துவர் ஆவார். எனவே, அந்த பெண் வசதியானவர் என்பதை தெரிந்து கொண்டு, அவரிடம் ரூ.25 லட்சம் பணத்தை கறந்ததோடு, ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான பணத்தையும் அப்பெண்ணையே அந்த வாலிபர் கொடுக்க வைத்துள்ளார். அதோடு, அப்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.