போதைவஸ்து வாங்குவதற்காக தொலைபேசியை திருடி விற்ற நபர் ! பணம் கொடுத்து வாங்கி உரியவரிடம் ஒப்படைத்த உயர்ந்த உள்ளம்

0

இலங்கை இளைஞனின் செயற்பாடு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த இசுரு பிரபாஷ்வர என்ற இளைஞனின் செயற்பாடு தொடர்பிலேயே இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இளைஞர் ஒருவர், பெறுமதியான கையடக்க தொலைபேசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த இளைஞன், தொலைபேசியை திருடி விற்பனை செய்ற முயன்றுள்ளார்.

எனினும் இது திருடப்பட்ட கையடக்க தொலைபேசி என அறிந்த இசுரு அதனை பணம் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார். பின்னர் அதன் உண்மையான உரிமையாளரை தேடி சென்று ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பதற்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உதவியை இசுரு பெற்றுள்ளார். அதற்கமைய அதன் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளார்.

இசுருவின் செயற்பாடு குறித்து பேஸ்புக்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.